புதினத்தைப் போன்று வள்ளலாரின் வரலாறு

Blogs / Reviews / புதினத்தைப் போன்று வள்ளலாரின் வரலாறு

விமர்சனம்: நாராயணி கண்ணகி

கிழக்கு பதிப்பகம் வெளியிட்டிருக்கும் நல்ல புத்தகம். வேகமாக பாதி வாசித்து விட்டேன் ஒரு மணி நேரத்தில். அப்படி ஒரு வேகமான நடை.

வள்ளலாரின் முழுமையான வாழ்க்கை வரலாற்றை, சரித்திரப் புதினத்தை எழுதுவதைப்போல் எழுதி இருக்கிறார் எழுத்தாளர் ஸ்ரீதேவி கண்ணன்.  ஒவ்வொரு அத்தியாயத்தின் முடிவிலும் பிரபலமான பத்திரிகைகளில் பிரபலமான எழுத்தாளர்கள் அடுத்த அத்தியாயத்திற்கான எதிர்ப்பார்ப்பை சஸ்பென்ஸோடு சொல்கிற மாதிரி சொல்கிறார்.

வள்ளலாரின் வாழ்வே விசித்திரங்கள் நிரம்பிய சித்திரங்கள் கொண்டிருக்கிறது. அதை அழகான நடையில் எழுதி இருக்கிறார்.

வாழ்த்துகள்.

வள்ளலார்: மாசற்ற ஜோதி

ஸ்ரீதேவி கண்ணன்

நூலைப் பெற: Amazon | FlipKart | Dial for Books

விமர்சனம்: நாராயணி கண்ணகி கிழக்கு பதிப்பகம் வெளியிட்டிருக்கும் நல்ல புத்தகம். வேகமாக பாதி வாசித்து விட்டேன் ஒரு மணி நேரத்தில். அப்படி ஒரு வேகமான நடை. வள்ளலாரின் […]

Scroll to Top