லண்டன், ஜெர்மனி தேசங்களுக்குப் போய் வந்த சூட்டோடு சுஜாதா குமுதத்தில் எழுதிய தொடர்கதை ‘ப்ரியா’. ஒரு சினிமா நடிகை படப்பிடிப்புக் காக லண்டன் செல்கிறாள். அவளுடன் அவள் காதலனும் போகிறான் என்று தெரிந்து கொண்ட, அவளது கண்டிப்பான கார்டியன், லாயர் கணேஷையும் அவளைக் கண்காணிக்க உடன் அனுப்புகிறார். லண்டனில் சதி, கொலை, கடத்தல் என அடுத்தடுத்து நடக்கும் நிகழ்வுகளில் சிக்கித் திக்குமுக்காடும் கணேஷ், ஸ்காட்லண்ட் யார்டு போலீஸுடன் இணைந்து மிரட்டும் அசத் தலான நாவல். சினிமாவாகவும் வெளிவந்து சூப்பர்ஹிட் ஆன நாவல் இது.