ஓர் அறிமுகக் கதாநாயகி, அவளுக்குத் தமிழ் கற்றுத் தரும் ஓர் ஆரம்பநிலை சினிமா கதாசிரியன். இந்த இரு முக்கிய கதாபாத்திரங் களுடன் சினிமா உலகின் பாசாங்குகள், பாவனைகளை நையாண்டி யுடன் சொல்லி வரும் கதை ஒரு கட்டத்தில் கொலை, போலீஸ் என்று கிரைம் கதையாக மாறி வேகமெடுக்கிறது. சுஜாதாவுக்கே உரித்தான எழுத்து லாகவத்தில் தங்க முடிச்சு கச்சிதமாக அவிழும் விதம் வெகு சுவாரஸ்யம்.