“””ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கானவர்கள் வெர்டிகோவால்
அவதிப்பட்டு வருகிறார்கள். ஆனால் தங்களுடைய பிரச்னை
வெர்டிகோ என்பதை உணராமலேயே வெவ்வேறு மருந்துகளை
உட்கொண்டு பலன் கிடைக்கும் என்று அவர்கள்
காத்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் முதலில் சரியான
பரிசோதனை முறைகளைப் பயன்படுத்தி வெர்டிகோவைக்
கண்டறிய-வேண்டியது அவசியம். அப்போதுதான் தீர்வை நோக்கி நகரமுடியும்.
காதில் ஏற்படும் தொந்தரவுகள் மற்றும் மூளையின் அசாதாரணத்தன்மையால்
வெர்டிகோ ஏற்படுகிறது. தலைசுற்றல் மட்டுமல்ல சமநிலையை அறிவதிலும்
வெர்டிகோ உள்ளவர்களுக்குப் பிரச்னை இருக்கும்.
· வெர்டிகோ ஏன் ஏற்படுகிறது?
· யாருக்கெல்லாம் ஏற்படும்?
· அதன் அறிகுறிகள் என்னென்ன?
· வெர்டிகோ ஏற்பட்டால் நினைவாற்றல் மறைந்துவிடுமா?
· சிகிச்சை என்ன? தீர்வு என்ன?
· வெர்டிகோ பிரச்னை உள்ளவர்கள் என்னவெல்லாம் செய்யவேண்டும், செய்யக்கூடாது?
பல்வேறு விருதுகளையும் பாராட்டு-களையும் பெற்ற டாக்டர்
ஏ.வி. ஸ்ரீனிவாசனின் இந்தப் புத்தகம் வெர்டிகோவைப்
புரிந்துகொள்ளவும் அதிலிருந்து மீண்டு வரவும் உதவும்.
இவரது ‘பார்க்கின்ஸன்ஸ் பயங்கரம்’, ‘நினைவாற்றல் நிரந்தரமா?’
போன்ற நூல்கள் மிகுந்த வரவேற்பைப் பெற்றவை.””
“