பனி பொழியும் இருள் விலகாத காலை, சில்லென்று மனம் தழுவும் குளிர், சுடச் சுட நெய் மணக்கும் பொங்கலுடன், காற்றில் தவழ்ந்து வரும் இனிமையான திருப்பாவை பாசுரங்களைக் கேட்பதே மார்கழி மாதத்தின் சுகானுபவம். அதுவொரு புனிதம். அது வொரு பரவசம்! கரைந்து காணாமல் போகும் அனுபவம்.
ஆண்டாள் நாச்சியார், கண்ணன் மீதான தீராக் காதலுடன் மார்கழி மாதம் நோன்பு நோற்ற 30 பாடல்களுமே ருசிகரமானவைதான். மனத்தை லயத்தில் ஆழ்த்தி வசீகரிப்பவைதான்.
திருப்பாவையின் பக்தியையும் இலக்கிய நயத்தையும் சொட்டுச் சொட்டாக அனுபவியுங்கள்.