MRP:

125.00

Length:

120

ISBN:

9788184933437

Published on:

01-01-2010

Imprint:

Nalam Veliyeedu

குழந்தைகளுக்கான பல் பாதுகாப்பு \ Kuzhandhaikalukkana Pal Padhugappu

குழந்தைகளுக்கான பல் பாதுகாப்பு \ Kuzhandhaikalukkana Pal Padhugappu

ஒவ்வொரு பெற்றோரும் தங்களுடைய குழந்தை அழகாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு என்று சொல்வதில்லையா? அந்த அழகுக் குழந்தையின் முகத்துக்கு அழகு சேர்ப்பது முத்துப் போன்ற பற்கள்தான். அதற்கு, பற்கள் முறையாகப் பராமரிக்கப்படவும், பாதுகாக்கப்படவும் வேண்டும். அந்த வகையில்,

* குழந்தைகளின் பற்களைப் பாதுகாப்பது எப்படி?
* குழந்தைகளின் பற்களில் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன?
* மருத்துவச் சிகிச்சையின்போது மருத்துவரோடு குழந்தையை ஒத்துழைக்க வைப்பது எப்படி?
* சிகிச்சைக்கு ஒத்துழைப்பு தரமுடியாத குழந்தைகளைச் சமாளித்து சிகிச்சை அளிப்பது எப்படி?
* குழந்தைகளின் பல் பாதுகாப்பு குறித்து பெற்றோர்களுக்கான அறிவுரைகள் என்னென்ன?

என்பது உள்ளிட்ட குழந்தைகளுக்கான பல் பாதுகாப்பு குறித்து நிறைய விஷயங்கள் இந்தப் புத்தகத்தில் அலசி ஆராயப்பட்டுள்ளன. குழந்தையின் பன்னிரண்டு வயதுக்குள் மேற்கொள்ளப்படும் பல் பாதுகாப்புதான், ஆயுள் வரைக்கும் நீடித்து நிற்கும் என்று அறிவுறுத்தும் இந்தப் புத்தகம், உங்களுடன் இருக்கும் பல் மருத்துவர்.

டாக்டர். ஜி. தண்டபாணி, பல் மருத்துவத்தில் பட்டப்படிப்பும், பல் சீரமைப்பில் பட்ட மேற்படிப்பும் முடித்தவர். பல் மருத்துவத்தில் 40 ஆண்டு கால அனுபவம் உள்ளவர். பல முன்னணிப் பத்திரிக்கைகளில் பல் பராமரிப்பு குறித்து கட்டுரைகள் எழுதி இருக்கிறார். பல ஆண்டுகள் அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்று தற்போது, ஸ்ரீபாலாஜி பல் மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

டாக்டர். பெரியகருப்பன் சொக்கலிங்கம், பல் மருத்துவப் படிப்பில் தங்கப் பதக்கமும், குழந்தைகளுக்கான பல் மருத்துவ பட்ட மேற்படிப்பில் பல்கலைக் கழகத்தில் முதல் இடமும் பெற்றவர். தற்போது தமிழ்நாடு பல் மருத்துவக் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வரும் இவர், தேசிய மற்றும் சர்வதேச கருத்தரங்குகளில் பல் மருத்துவம் குறித்த கட்டுரைகளைச் சமர்ப்பித்துள்ளார்.

Buying Options:

MRP:

125.00

Length:

120

ISBN:

9788184933437

Published on:

01-01-2010

Imprint:

Nalam Veliyeedu

Scroll to Top