விமர்சனம்: ஷாலினி கெரால்ட்
கீழடி என்று பெரிதாக தலைப்பு வைத்து இருந்தாலும், உலகிலுள்ள பாதி நாடுகளில் உள்ள தொல்லியல் ஆராய்ச்சிக் குறிப்புகளை சுவைபட எழுதியது மட்டும் அல்லாமல், தமிழில் உள்ள சங்க காலத்துப் பாடல்களின் குறிப்புகளையும் குறிப்பிட்டு உள்ளார் ஆசிரியர். முனைவர் ஆராய்ச்சிக்கு சற்றும் குறையாத புத்தகம். அத்தனை தகவல்கள். நிறைய புகைப்படங்கள். குறிப்பாக, தொல்லியல் ஆய்வு சார்ந்த கருவிகளின் படங்கள், தொல்லியல் ஆய்வு சார்ந்த தொழில்நுட்பங்கள் என நமது பழமையை தேடிடும் முடிவிலா பயணமே தொல்லியல். அகழாய்வு பணிகள் என்பது புதையல் தேடும் விளையாட்டல்ல, விடை தெரியாத கேள்விக்கு உண்மையை தேடும் நெடும்பயணம். துருக்கி, எகிப்து, அல்கோரியா, நினிவே, இந்தியா, தமிழகம் என உலகநாடுகளில் உள்ள தொல்லியல் படிமங்களையும் பதிவு செய்து இருக்கிறார் ஆசிரியர். அருமையான புத்தகம்.
ஆதிச்ச நல்லூர் பற்றி மட்டுமே 4 கட்டுரை. அவர்கள் பயன்படுத்திய கண்ணாடி முதல் இன்று ஆரன்முளா கண்ணாடிவரையிலான தகவல்கள். நீலகிரி குங்கிலியமும் பைபிளும் பெரியபுராணமும் கலந்து வருகிறது.
இறுதியில் புகைப்பட, தரவுகளின் குறிப்புகள், இணையதள முகவரி கூடுதல் தகவலுக்காக.
எப்படியும் எல்லாக் கட்டுரைகளிலும் பெண்ணியம் பேசுவதற்கு நிவேதிதா லூயிஸ் அவர்களுக்கு வாழ்த்துகள்.
மொத்தம் 20 கட்டுரைகள் இருக்கின்றன.
அணிந்துரை ஆர் பாலகிருஷ்ணன் ஐஏஎஸ் அவர்கள், வாழ்த்துரை திருமிகு தியோடர் பாஸ்கரன் அவர்கள், கல்வெட்டு ஆய்வாளர் திருமிகு பத்மாவதி, திருமிகு மார்க்சிய காந்தி என இத்தனை பேர் வாழ்த்து பெற்ற நூல் என்றால் சும்மாவா?
மறக்காமல் வாங்கி படியுங்கள்.
ஆதிச்சநல்லூர் முதல் கீழடி வரை
நிவேதிதா லூயிஸ்
நூலைப் பெற: Amazon | FlipKart | Dial for Books