ஜெயமோகன், யுவன் சந்திரசேகர், பெருமாள் முருகன் : படைப்புகளும் ஆளுமையும்

Blogs / Reviews / ஜெயமோகன், யுவன் சந்திரசேகர், பெருமாள் முருகன் : படைப்புகளும் ஆளுமையும்

விமர்சனம்: அண்ணாமலை மாரியப்பன்

ஒரு நல்ல இலக்கிய நேர்காணல் என்பது அந்த ஆளுமையின் புதிய வாசகருக்கு அவரை வாசிக்கும் அழுத்தமான உந்துதலைத் தர வேண்டும்; ஏற்கனவே அவரைக் கொஞ்சம் வாசித்திருப்பவருக்கு அவரது பிற படைப்புகள் அல்லது வேறு முகங்கள் குறித்த வெளிச்சத்தை அளிக்க வேண்டும்; அவரது ஆழமான வாசகருக்கு அவர் பற்றிய புதிய தரிசனத்தை அவர் எழுத்துக்கள் குறித்த மற்றொரு கோணத்தை முன் வைக்க வேண்டும்.

மும்மூர்த்திகளான மூவருமே வெவ்வேறு இயல்புடையவர்களாக இருக்கிறார்கள்.

சரி, நேர்காணல் என்பதால் கேள்வி பதிலாகத்தான் இருக்கும். அதில் என்ன சுவாரஸ்யம் இருந்துவிடப் போகிறது என்றால், சுவாரசியத்தின் கூடவே விறுவிறுப்பும் இருக்கிறது. காரணம் கேள்விகளைத் தொடுத்த சிஎஸ்கே, மூவரின் நூல்களையும் வெகுவாக வாசித்து விட்டு பிறகு அவர்களை நேர்காணல் செய்திருக்கிறார். அதனால் வழக்கமான கேள்வி பதில் என்று இல்லாமல் முன்னுரையில் கூறியபடி மூவரின் மொத்த ஆளுமையையும் கொணர்ந்திருக்கிறார். அதற்காக நிச்சயம் எழுத்தாளரைப் பாராட்டியே ஆக வேண்டும். சொல்லப்போனால் 3டியில் எடுத்த படம் போல் மூன்று எழுத்தாளர்களையும் அவர்களின் குறுக்கு வெட்டு தோற்றத்தையும் நேர்காணல்கள் மூலம் நாம் காணலாம்.

தமிழின் சிறந்த படைப்பாளிகளின் படைப்பு மனத்தை உள்ளபடியே நமக்கு முன்னின்று வழங்கியதற்கு எழுத்தாளர் சி.சரவண கார்த்திகேயனுக்கு நன்றிகள் பல.

நூல் : மும்மூர்த்திகள் [ஜெயமோகன் யுவன் சந்திரசேகர் பெருமாள் முருகன் ]

சி. சரவண கார்த்திகேயன்

நூலைப் பெற: Amazon | FlipKart | Dial for Books

விமர்சனம்: அண்ணாமலை மாரியப்பன் ஒரு நல்ல இலக்கிய நேர்காணல் என்பது அந்த ஆளுமையின் புதிய வாசகருக்கு அவரை வாசிக்கும் அழுத்தமான உந்துதலைத் தர வேண்டும்; ஏற்கனவே அவரைக் […]

Scroll to Top