சாகசங்களுக்கும் சர்ச்சைகளுக்கும் பின் இருக்கும் வரலாறு

Blogs / Reviews / சாகசங்களுக்கும் சர்ச்சைகளுக்கும் பின் இருக்கும் வரலாறு

விமர்சனம்: பேஜே போஜன்

மொத்தம் 25 தலைப்புகளும் 166 பக்கங்களும் கொண்ட இந்தப் புத்தகம் பேசுவது இஸ்ரேலிய உளவு அமைப்பான மொஸாட் பற்றி. ஏற்கெனவே மொஸாட் பற்றி நேற்று வேறு ஒரு புத்தகம் படித்திருந்தேன். ஆனால் இந்தப் புத்தகம் அதில் இருந்து வேறுபட்டது. அது மட்டும் இல்லாமல், எத்தனை தடவை மொஸாட் என்ற உளவு அமைப்பைப் பற்றி படித்தாலும் அதில் உள்ள விறுவிறுப்பு மட்டும் குறையவே குறையாது.அதற்கு ஒரு முக்கியக் காரணம் மத்த உளவு அமைப்புகள் வெறும் உளவு பார்ப்பதற்கும், உளவு செய்தியை திரட்டி அந்த நாடுகள் மூலம் ராஜதந்திர ரீதியில் அழுத்தம் தந்து எதிரி நாட்டு திட்டங்களைத் தடுக்க முடியம். ஆனால் மொஸாட் அப்படி கிடையாது யாரவது அந்த நாட்டிற்கு எதிராகச் செயல்படுகிறார்கள் என்றால் அவர்களை அழித்துவிட்டுதான் அடுத்த வேலையை பார்க்கும். அதற்கு ஒரு சிறந்த உதாரணம், தற்போது நடந்த அந்த பேஜர் வெடிப்பு.

இதுபோல் ஏரளமான விஷயங்கள் மொஸாட்டின் சரித்திர வெற்றியில் இருக்கின்றன. ஒலிம்பிக் இறந்த இஸ்ரேலிய வீரர்களை கொன்றவர்களைக் குறிவைத்து தாக்கியது.நாஜியின் வலது கை என்று சொல்லபடும் அடால்ப் ஐக்மேனை அர்ஜென்டினா இருந்து கடத்தியது என ஏகப்பட்ட விஷயங்களை பற்றி சொல்லலாம். இப்படி நிறையச் சாதனைகள் செய்து இருந்தாலும் சர்ச்சைகளுக்கும் குறைவில்லாத அமைப்புதான் மொஸாட். அது என்ன என்பதை பற்றி புத்தகம் படிக்கும் போது தெரிந்து கொள்ளலாம்.

மொஸாட்

நன்மாறன் திருநாவுக்கரசு

நூலைப் பெற: Amazon | FlipKart | Dial for Books

விமர்சனம்: பேஜே போஜன் மொத்தம் 25 தலைப்புகளும் 166 பக்கங்களும் கொண்ட இந்தப் புத்தகம் பேசுவது இஸ்ரேலிய உளவு அமைப்பான மொஸாட் பற்றி. ஏற்கெனவே மொஸாட் பற்றி […]

Scroll to Top