வடசென்னை என்பது சினிமா காட்டுவது அல்ல

Blogs / Reviews / வடசென்னை என்பது சினிமா காட்டுவது அல்ல

விமர்சனம்: அறமும் விதையும் அரவிந்த்

’தமிழகத்தின் இருபது தொல்லியல் தடங்களை எளிய நடையில் அறிமுகம் செய்கிறார் நிவேதிதா. கடந்த 120 ஆண்டுகாலத் தமிழ்த் தொல்லியல் ஆய்வுகளின் பாதையும் பயணும் இதில் அடங்கியிருக்கின்றன’ – ஆர். பாலகிருஷ்ணன்

வரலாறு, தொல்லியல், பண்பாடு உள்ளிட்ட துறைகளில் கடந்த ஆறாண்டுகளாக இயங்கி வருபவர். வடசென்னை என்பது சினிமா காட்டும் வடசென்னை அல்ல. அத்தனை குறுகிய வர்க்க ,சாதி எல்லைக்குள் அதை அடைக்க முடியாது. அது ஒரு பெருங்கடல். பல்வேறு அடுக்குகளில் வெவ்வேறு உயிரினங்கள் பகிர்ந்து கலந்து வாழும் கடல். பலருக்கு நாம் இருக்கும் இடத்தின் வரலாறு தெரியாது. சொந்த ஊரின் வரலாறே தெரியாமல் எதைச் சாதிக்க போகிறார்களோ.

2012இல் சென்னை கோடம்பாக்கத்தில் வேலை செய்துகொண்டிருக்கும் பொழுது அங்கிருந்து மிக அருகில் இருக்கும் வள்ளுவர்கோட்டம்கூட செல்லாதவர்களை என்னவென்று சொல்ல என்று நினைத்திருக்கிறேன்.

இப்பொழுது வேலை செய்த அலுவலகத்தில் இருக்கும் ஒருவருடன் வண்ணாரப்பேட்டை வரை செல்ல நேரிட, வழி நெடுக நிறையப் பேசிக் கொண்டும் சொல்லிக் கொண்டும் வருவார். அப்படிதான் இந்த ஹைகோர்ட் சுவரில் வைத்திருக்கும் எம்டன் கல்வெட்டை காட்டினார். அப்பொழுதுதான் முதன் முதலாக அதைப் பார்த்தேன். அதற்கு முன் பல நூறு தடவை அதைத் தாண்டி சென்றிருக்கிறேன்.

தோழர் நிவேதிதா அவர்கள் மரபு நடை மூலம் பல வரலாற்று இடங்களைத் தூசி தட்டி மக்களுக்கு எடுத்துரைத்துள்ளார்.

மரபு நடைப்பற்றி இப்பொழுதுதான் முதன்முறையாக கேள்விப்படுகிறேன்.

எம்டன் கல்வெட்டு முதல் ஒவ்வொரு இடமும் அதிகம் கடந்து சென்ற இடங்களில் கவனிக்க தவறிய அவ்வளவு வரலாறுகளைப் பல சிரமங்கள் மத்தியல் நேர்த்தியான மரபு நடைகொண்டும் புத்தகத்தின் மூலமும் அழகாக விளக்குகிறார்.

கறுப்பர் நகரம் பற்றியும் முதன் முதலில் அறிந்து கொள்கிறேன்.

சின்னச் சின்னத் தெருக்கள், சாலைகள், சுடுகாடுகள் என எல்லா வரலாற்றையும் படிக்க படிக்க வடசென்னைக்கு ஒரு மரபு நடை செல்ல மனம் எத்தளிக்கிறது.

சென்னையில் குறிப்பாக வடசென்னையில் இருக்கும் நண்பர்களுக்கு இவ்வகையான புத்தகங்களை பரிசாக அளித்து அவர்களின் வரலாற்றை அவர்களுக்கு எடுத்துக் காட்டுவோம்.

புத்தகம் : வடசென்னை வரலாறும் வாழ்வியலும்
நிவேதிதா லூயிஸ்

நூலைப் பெற: Amazon | FlipKart | Dial for Books

விமர்சனம்: அறமும் விதையும் அரவிந்த் ’தமிழகத்தின் இருபது தொல்லியல் தடங்களை எளிய நடையில் அறிமுகம் செய்கிறார் நிவேதிதா. கடந்த 120 ஆண்டுகாலத் தமிழ்த் தொல்லியல் ஆய்வுகளின் பாதையும் […]

Scroll to Top