பொற்கால ஆட்சியைத் தந்த ராஜராஜன்

Blogs / Reviews / பொற்கால ஆட்சியைத் தந்த ராஜராஜன்

விமர்சனம்: சி.பெ மாரிமுத்து

கி.பி.5இல் இருந்து எட்டாம் நூற்றாண்டு வரை பழையாறை, உரகபுரம் ஆகிய ஊர்களில் மட்டும் சோழர்கள் வாழ்ந்து வந்தார்கள். பல்லவர்களுக்கு அடிபணிந்து வரி செலுத்திக் கொண்டிருந்தார்கள் சோழர்கள்.

களப்பிரர்கள், முத்தரையர்கள், அவர்களுக்கு அடுத்து பல்லவர்களின் அனுமதியோடு தஞ்சாவூர் நிர்வாகம் விஜயலயன் சோழனுக்கு அதிகாரம் கிடைத்தது. அப்பொழுதுதான் சோழ அரசு தலை தூக்க ஆரம்பித்தது. பின்பு பாரந்தக சோழன், சுந்தர சோழன், உத்தம சோழன், ஆதித்த கரிகாலன் எனப் பலர் சோழ வளர்ச்சிக்குக் காரணமானார்கள். இதில் ஆதித்த கரிகாலன் உத்தம சோழனால் கொல்லப்பட்டு இளவரசராகவே இறந்துவிட்டார்.

உத்தம சோழனுக்குப் பிறகு கி.பி 985ல் மக்களின் ஆதரவோடு அரியணை ஏறினார் ராஜராஜசோழன்.

அவர் ஆட்சிக்காலம் பொற்காலம் என்று கூறப்படுகிறது. முதலில் அவர் எல்லையை விரிவுபடுத்த விரும்பினார். அதற்காக மூன்று மகா சேனைகளை உருவாக்கினார். யானைப்படை, குதிரைப்படை, காலாட்படை, கப்பற்படை, உள்ளூர் படை எல்லாம் படைகளுக்கும் தலைவராக ராஜராஜசோழன் இருந்தார்.

ராஜேந்திரன் சோழன் இளவரசராக இருக்கும்பொழுது பல்வேறு போர்களில் தளபதியாக இருந்து பல வெற்றிகளை குவித்தார். இலங்கை, இமயம் என சோழர்களின் புலிக்கொடி பறந்தது,

ராஜராஜசோழன் பல்வேறு விதமான வரிகளை விதித்தார். அதன் அடிப்படையிலேயே ஆட்சி புரிவதை வலுப்படுத்தினார். வங்கி ஒன்று தொடங்கியிருந்தார் அதில் மக்களுக்கு கடன் கொடுத்து 12 சதவிகிம் வட்டி பெற்றிருக்கிறார்.

பல்வேறு நகரங்களை உருவாக்கி உள்ளார். வரிவசூல் இல்லாத நிலங்களை நகரமாகி அதில் மக்களைக் குடியேற்றி ஒவ்வொரு தெருவிலும் ராஜராஜ சோழனின் வெற்றிகளை கல்வெட்டுகளாக நிறுவப்பட்டன. தேர்தல் முறை இருந்திருக்கின்றன. தஞ்சை பெரிய கோவில் ஒரு மலைக் குன்று போல் அமைக்கப் பட்டதால் பல்வேறு நிலநடுக்கம் போர்களையும் தாங்கி நின்றது. ஏன் குன்று என்று சொல்கிறேன் என்றால் அதில் எந்தவிதமான பூசல்களும் இல்லாமல் ஒரே மாதிரியான கற்களை அடுக்கு முறையில் கோவில் எழுப்பப்பட்டுள்ளது. அதில் மேலே உச்சியில் இருக்கும் ஒரே கல் விமானம் என்பதும் பொய். பல்வேறு சிறு கற்களின் ஒன்றிணைப்பால் உருவாக்கப்பட்டது. அதேபோல் அக்கோயிலை கட்டப் பணி புரிந்த அனைத்து பணியாளர்களின் பெயர்களும் கல்வெட்டில் பொறிக்கப்பட்டன.

நடனகலை, இலக்கியம், சிற்பக்கலை, ஓவியம் அனைத்து விதமான கலைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தார் ராஜராஜன். எல்லாமே கல்வெட்டுகளாக, செப்பேடுகளாக, பதியப்பட்டன கல்வெட்டுகளாக அனைத்து நடவடிக்கைகளும் பதியப்பட வேண்டும் என்பது அரசாணையாகவும் இருந்தது,

பண்டமாற்று முறை வழக்கத்தில் இருந்தாலும் நாணய முறை அறிமுகப்படுத்தப்பட்டது உலோகங்களில் நாணயங்கள் வெளியிடப்பட்டன தங்கம், வெள்ளி, செம்பு, பித்தளை ஆகிய நாணயங்கள் புழக்கத்தில் இருந்தன.

விவசாயத்திற்கு அதிக முக்கியத்துவமும் கொடுக்கப்பட்டன. அதேபோல் நீர்ப்பாசனங்களும் உருவாக்கப்பட்டு பல்வேறு ஏரிகள் வெட்டப்பட்டன

விளைகின்ற பொருளுக்கு விலை நிர்ணயிக்கப்பட்டு இருந்தன. அவை அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தன.

இப்பொழுது நாம் வாழ்கின்ற வாழ்க்கையை அரசியலமைப்பு, சமூக அமைப்பையும் அப்பொழுதே உருவாக்கி பொற்கால ஆட்சியை ராஜராஜன் கொடுத்துள்ளார்.

நான் கூறியது அத்தனையும் பல்வேறு கல்வெட்டுகளின், செப்பேடுகளின் ஆதாரத்தோடு ஆசிரியர் புத்தகமாக கொடுத்தது மிகச்சிறப்பு. ராஜராஜன் பற்றிய நாவல் எழுதுபவர்களுக்கு இந்த நூல் ஆய்வு நூல் என்பதனால் மிகப்பெரிய உதவியாக இருக்கும்.

ராஜராஜ சோழன்
ச.ந.கண்ணன்
நூலைப் பெற: Amazon | Flipkart | Dial for Books

விமர்சனம்: சி.பெ மாரிமுத்து கி.பி.5இல் இருந்து எட்டாம் நூற்றாண்டு வரை பழையாறை, உரகபுரம் ஆகிய ஊர்களில் மட்டும் சோழர்கள் வாழ்ந்து வந்தார்கள். பல்லவர்களுக்கு அடிபணிந்து வரி செலுத்திக் […]

Scroll to Top