உலகை உலுக்கிய போரின் பிரமாண்ட சித்திரம்

Blogs / Reviews / உலகை உலுக்கிய போரின் பிரமாண்ட சித்திரம்

விமர்சனம்: ஜீவானந்தம்

ஒரு சிப்பாயின் கனவு என ஆரம்பிக்கும், ஆம் ஹிட்லர் முதல் உலகப்போரின் போது சிப்பாயே. முதல் உலகப்போரில் ஜெர்மனி தோற்றுவிட்டது. போர் நடத்தியவர்கள் சரியில்லை மக்கள் ஆதரவு இல்லை , நான் தலைமையிடத்தில் இருந்திருந்தால் என்ன செய்திருப்பேன் தெரியுமா என மனதிற்குள் கர்ஜித்துக் கொண்டே இருப்பார். அப்படியே ஒரு கட்சியில் இணைந்து அதன் தலைவராகவும் மாறி பல சிறப்பான உரைகளை ஆற்றி மக்களின் மனதில் நம்பிக்கையை விதைத்து, போருக்கு தயார்படுத்தினார் ஹிட்லர்.

முதலில் சிறிய நாடுகள் அனைத்தையும் கைப்பற்றி விடுவார் ஹிட்லர். இதையெல்லாம் வாசிக்கும் போது நமக்குக் கதாநாயகனாக தோற்றமளிப்பார். பிறகு பெரிய நாடான பிரரான்ஸை கைப்பற்றி அனைத்து ஐரோப்பிய நாடுகளுக்கும் அதிர்ச்சி அளிப்பார்.

பிறகு சோவியத் மீது போர். ஆரம்பக்கட்டத்தில் ஜெர்னி வென்று விடும் எனத் தோன்றினாலும், நான் இருக்கும்வரை அது நடக்காதென ஸ்டாலின் கர்ஜித்துக் கொண்டே போருக்கு ராணுவ வீரர்களை மட்டுமின்றி விவசாயிகள், தொழிலாளர்கள் என அனைவருக்கும் போர்ப் பயிற்சிகள் அளித்து அனுப்புவார். ஹிட்லர் அதிர்ந்து விடுவார். நேற்று வரை விவசாயம் செய்தவனை உங்களால் தோற்கடிக்க முடியவில்லையா? நீங்களெல்லாம் போர் வீரர்களா? சோவியத்துக்கு எதிரான போரில் ஜெர்மன் தோற்று விடும்.

இந்தக் கோபமே ஹிட்லரின் வெற்றிக்கும் காரணமாக அமைந்தது, தோல்விக்கும் காரணமாக அமைந்தது. தோல்வி அடைந்தவுடன் அவனை மாற்று. இவனை மாற்று. நீ சரியில்லை, தேவையில்லை, உன்னைப் பதவியை விட்டு தூக்குகிறேன் எனச் சர்வாதிகாரம் செய்தார். அவரை எதிர்த்து கேள்வி கேட்கக்கூடாது. அவர் சொல்வதே சரி என இருந்தார். சோவியத் யுத்தத்துக்கு பிறகு பிரிட்டன், அமெரிக்கா எனத் தோல்வியுற்று சரணடைந்து அவரே சுட்டுக்கொண்டு இறந்தும் போனார்.

போர் முடிவடைந்த பிறகே அவர் செய்த யூத இனப்படுகொலை தெரியவரும். அதற்கு அவர் சொல்லும் முக்கிய காரணம், அவர்கள் நம்மை அடிமைப்படுத்த பார்க்கிறார்கள். மோசமானவர்கள் என்றும் நம்மை விட அவர்களே உயர் பதவிகளில் இருக்கிறார்கள். மொத்தத்தில் யூதன் என்றாலே வெறுப்பு.

அவர்களைக் கொல்வதற்கு ஏற்படுத்தப்பட வதைமுகாம்களைப் பற்றி வாசிக்கும் போது இப்படியெல்லாம் ஒரு மனிதனா எனத் தோன்றவைக்கும்.

அமெரிக்கா ஜப்பான் மீது வீசிய அணுகுண்டு, போரின்போது ராணுவத்தினரும் மக்களும் என்னென்ன துன்பங்களை அனுபவித்தனர். போருக்கு பிறகு காலனியாதிக்கம் குறைந்தே போனது. கொரியா இரண்டாக பிளவுபட்டு , ஜெர்மனி சிலகாலம் இரண்டாக பிளவுபட்டு எனக் கடைசி வரை விறுவிறுப்பாகவே இருக்கும்.

உலகப்போர்களை பற்றி அறிந்து கொள்ள ஆசிரியரின் முதல் மற்றும் இரண்டாம் உலகப்போர் புத்தகங்களை வாசித்தாலே நமக்கு ஓரளவு புரிதல் ஏற்பட்டு விடும். அனைவரும் கண்டிப்பாக வாசியுங்கள் தோழர்களே.

இரண்டாம் உலகப்போர்
மருதன்
நூலைப் பெற: Amazon | Flipkart | Dial for Books

விமர்சனம்: ஜீவானந்தம் ஒரு சிப்பாயின் கனவு என ஆரம்பிக்கும், ஆம் ஹிட்லர் முதல் உலகப்போரின் போது சிப்பாயே. முதல் உலகப்போரில் ஜெர்மனி தோற்றுவிட்டது. போர் நடத்தியவர்கள் சரியில்லை […]

Scroll to Top