MRP:

300.00

Length:

272

ISBN:

9788184939897

Published on:

01-04-2019

Imprint:

Kizhakku Pathippagam

வெற்றிக்கு ஒரு வரைபடம்! \ Vetrikku Oru Varaipadam

வெற்றிக்கு ஒரு வரைபடம்! \ Vetrikku Oru Varaipadam

தமிழில்: சந்திரசேகரன் கிருஷ்ணன்

நாம் கற்க விரும்புகிறோம். நம்மிடமுள்ள திறன்களை வளர்த்துக்கொள்ள விரும்புகிறோம். தொடர்ந்து மேலே மேலே முன்னேறவும் மகிழ்ச்சியோடு வாழவும் விரும்புகிறோம். இருந்தும், நம் லட்சியம் மாய மானைப் போல் விலகி விலகிச் சென்றுகொண்டே இருக்கிறது. அந்த மாய மானைப் பிடிப்பதற்கு ஒரு வழிதான் இருக்கிறது. மாயாவியாக மாறிவிடுங்கள். இந்தப் புத்தகம் அந்த
மந்திரத்தை அற்புதமாகச் சொல்லிக்கொடுக்கிறது.

கற்கவேண்டும் என்று விரும்பினால் மட்டும் போதாது; அக்கறையோடும் ஆர்வத்தோடும் எப்படிக் கற்கவேண்டும் என்பதை நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டும். திறன்களை வளர்த்துக்கொள்வது முக்கியம்; ஆனால் அதைவிட முக்கியம் உங்களுக்குள் இருக்கும் திறன்கள் என்னென்ன என்பதைக் கண்டறிவது. மகிழ்ச்சி முக்கியம் ஆனால் எது மகிழ்ச்சி என்பது தெரியவேண்டுமல்லவா?

சுவாரஸ்யமான நடையில், ஏராளமான எடுத்துக்காட்டுகளோடும் குதூகல மூட்டும் சிந்தனை வரைபடங்களோடும் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் புத்தகம் உங்கள் வாழ்வை ஆச்சரியமூட்டும் வகையில் மாற்றியமைக்கப் போகிறது. உடற் பயிற்சி தொடங்கி மனப் பயிற்சி வரை; அறிவியல் தொடங்கி தியானம் வரை அனைத்தையும் புதுமையான முறையில் அறிமுகப்படுத்துவதோடு இவற்றைக் கருவிகளாகக் கொண்டு வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் எப்படியெல்லாம் வெல்லலாம் என்பதையும் கற்றுக்கொடுக்கிறது இந்நூல்.

நீங்கள் மேல் படிப்புக்குத் தயாராகிக்கொண்டிருக்கும் மாணவரா? வாழ்க்கை மேம்படவேண்டும் என்னும் விருப்பம் கொண்டவரா? உங்கள் மூளையின் ஆற்றலை முழுவதும் பயன்படுத்திக்கொள்ள துடிக்கிறீர்களா? கண்டிப்பாக இந்தப் புத்தகத்தைப் படியுங்கள். படிப்படியாக உங்கள் வாழ்க்கை மாறுவதைக் கண்ணாறக் காணுங்கள்.

Buying Options:

MRP:

300.00

Length:

272

ISBN:

9788184939897

Published on:

01-04-2019

Imprint:

Kizhakku Pathippagam

Related Books

Scroll to Top